காரைக்காலம்மையார் குருபூசை தினம் 30.03.2025
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் கோவில்குளம் ஸ்ரீ சித்திநாதர் நாகம்பாள் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்ற காரைக்காலம்மையார் குருபூசையானது ஆசிரியர் மாணவர், பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகி கலைநிகழ்வுகள் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
poojai 1
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா அன்னை சாரதா அறநெறிப்பாடசாலையில் 16.03.2025 ஆம் திகதி இடம்பெற்ற திருவள்ளுவர் குருபூசையானது ஆசிரியர் மாணவர், பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் ஆலய பிரதம குருவின் ஆசியுடன் ஆரம்பமாகி கலைநிகழ்வுகள் , பரிசில்கள் வழங்குதலுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
poojai 2
நாடக பயிற்சி பட்டறை
எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி .தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தரின் தலைமையில் தாழங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ விநாயகர் அறநெறிப்பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் சர்வதேச நாடக தினத்தை முன்னிட்டு 23.03.2025ஆந் திகதி மு.ப 8.00 மணிக்கு மாணவர்களுக்கு நாடகத் திறனை வெளிப்படுத்துவதன் பொருட்டு திரு.பரமேஸ்வரன் ராஜதிலகன் என்பவரால் நாடக பயிற்சி பட்டறை நடத்தபட்டது.
 

எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 25.03.2025 செவ்வாய்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு மு. ப 10.00 மணிக்கு புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களான டிலக்சனா, சகானா,பிரவின் என்பவர்களினால் தொற்றாநோய் பற்றியும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றியும் விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.

 

                    

கவிதை பயிற்சி பட்டறை
எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி .தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தரின் தலைமையில் மாவிலங்கன்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் மாணவர்களுக்கு கவிதை எழுதும்; திறனை ஊக்கப்படுத்துவதன் பொருட்டு திரு.தங்கராசா இன்பராசா என்பவரால் 23.03.2025ஆந் திகதி மு.ப 9.30 மணிக்கு கவிதை பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.
 

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top