News

மங்கையற்கரசியார் குரு பூசை தினம்
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மங்கையற்கரசியார் குரு பூசை தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்து கலாசார உத்தியோகத்தரின் தலைமையில் செல்வாநகர் கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒரு குழந்தைக்கு கல்வி புகட்டு இந்து நரசிம்மர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றதலுடன் 2025.05.18ஆந்திகதி மு.ப 9.00 மணிக்கு இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் மங்கையற்கரசியார் குரு பூசை தினம் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது. பின்பு மாணவர்களுக்குசிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
திருநாவுக்கரசு நாயனார் குரு பூசை தினம்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா விநாயகர் அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையானது 2025.04.27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வானது தாழங்குடா காளியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகி மட்/ விநாயகர் வித்தியாலயத்தின் ஊடாக விநாயகர் அறநெறிப்பாடசாலையை வந்தடைந்தது. பின்பு கலை நிகழ்வுகள், சிறப்பு சொற்பொழிவு என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.












