எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள Youth Training Center ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உற்பத்தி திறன் மற்றும் புத்தாக்கம் பற்றிய அடிப்படை சான்றிதழ் பாடநெறியானது தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இன்று 18.03.2025 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு Youth Training Center இல் நடைபெற்றது.
இதன் வளவாளராக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜீவராணி லோகநாதன் அவர்கள் கலந்து கொண்டதுடன் 60 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
 

 

எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 2025.03.18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கிரான்குளத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான பயறு பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

                   

இராமகிருஸ்ண குருமகராஜியின் 190 வது ஜனன தின விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாழங்குடா ஸ்ரீ விநாயகர் அறநெறிப் பாடசாலையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் எமது பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய இராமகிருஸ்ண குருமகராஜியின் 190 வது ஜனன தின விழா 2025.03.02 ஆந் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் இந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் அலுவல்களுக்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் இந் நிகழ்வில் அறநெறிப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
WhatsApp Image 2025 03 03 at 2.11.10 PMWhatsApp Image 2025 03 03 at 2.11.11 PMWhatsApp Image 2025 03 03 at 2.11.06 PMWhatsApp Image 2025 03 03 at 2.11.04 PM1

சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள்  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 08.03.2025 திகதி ஆரையம்பதி சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச மகளிர்களும் சிறப்பு அதியாக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி Dr.T.திலக்ஸன் அவர்களும்  பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு .S.திவாகரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.ASF. பரீட் அவர்களும்,  AMCOR நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. பரமசிவம் முரளிதரன் அவர்களும் SWO  தலைவர் திருமதி தயானி கிருஷ்ணாகரன் அவரகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பெண்களுக்கான கலைநிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் புகைத்தல் ஒழிப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்ட குறுக்கெழுத்து மற்றும் சித்திர போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையினை AMCOR பெண்கள் சுய உதவிக் குழுவினரும், SWO நிறுவனத்தினர் மற்றும் சமுர்த்தி திணைக்களமும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

481274002 2044282399414540 5100962960878360343 n481986300 2044282692747844 5655839322951843201 n482088415 2044282359414544 7764424949916591934 n482214166 2044282519414528 3635777397374810081 n482052726 2044282786081168 4064202523948977768 n482191487 2044282669414513 7036446294140608077 n481986600 2044282356081211 1825264449423139535 n

2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்
2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டமானது 25.02.2025 ஆம் திகதியன்று பிரதேச செயலக உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பி.ப 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது பிரதேச செயலக உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் பிரதேச செயலகத்தின் முதல் காலாண்டுக்கான செயற்பாடுகள் பற்றி முன்னளிக்கை(Presentation) செய்யப்பட்டது.
இக் கூட்டத்திற்கு அவதானிப்பாளர்களாக தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் திரு. ரொபட் அலோசியஸ் மற்றும் தேசிய கணக்காய்வு உத்தியோகத்தர் திரு. MIF.நபீல் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. A.S சசிகரன்,கணக்காளர் திரு V. நாகேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு A.சுதாகரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு.S.திவாகரன்,பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதோடு கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரால் கருத்துரைகளும் வழங்கப்பட்டதுடன் கூட்டமானது கணக்காளரின் நன்றியுரையுடன் பி.ப 4.15 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது
WhatsApp Image 2025 03 04 at 9.44.57 AM
WhatsApp Image 2025 03 04 at 10.09.31 AM

WhatsApp Image 2025 03 04 at 9.44.58 AM

WhatsApp Image 2025 03 04 at 10.10.10 AM

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top