News
தெய்வீக கிராம நிகழ்வு
மேற்படி நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி . தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 01.06.2025 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக சர்வ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகி திருநீற்றுக்கேணி செல்வ விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலய பூசை, கோமாதா பூசை ,மரநடுகை என்பன ஆலய நிகழ்வுகளாக இடம்பெற்றதுடன் நந்திக் கொடி ஏற்றல், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பனவற்றுடன் சைவப்புலவரும் சைவ பண்டிதருமாகிய யோ.கஜேந்திரா ஐயா அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட ஆக்கத்திறன் போட்டிகளுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு இறுதியில் அன்னதானம் வழங்குதலுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
மண்முனைப்பற்று கிராமிய விளையாட்டு விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி . தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தர்களின் தலைமையில் கிராமிய விளையாட்டு நிகழ்வானது மட்/மட்/தர்மபுரம் தர்மரெத்தினம் வித்தியாலத்தில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் பி.ப 2.30 மணிக்கு 28.05.2025 திகதி இனிதே ஆரம்பமாகியது.
நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பல வகையான விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நடுவர்களாக செயற்பட்டு தெரிவு செய்தனர். பின்பு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு, இறுதியில் கலாசார உத்தியோகத்தர் திருமதி. வளர்மதி ராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
தொற்றாநோய் மற்றும் நீரழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு.
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தரின் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 27.05.2025 செவ்வாய்க்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை கிராமசேவகர் பிரிவிலுள்ள பிரதேச மக்களுக்கு மு. ப 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களினால் நடமாடும் வைத்தியமுகாம் நடாத்தப்பட்டது. இதில் 63 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு கணக்கீட்டு பயிற்சி நெறி
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு கணக்கீட்டு பயிற்சி நெறியானது மாவட்ட செயலக CBO முகாமையாளர் திரு.க.பகிரதன் அவர்களால் தாழங்குடா சமுர்த்தி வங்கியின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் CBO பொருளாளர்களுக்கும் 28.05.2025 புதன்கிழமை அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இதில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு கணக்கீட்டு பயிற்சி நெறி - 2025
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு கணக்கீட்டு பயிற்சி நெறியானது ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் CBO பொருளாளர்களுக்கும் 22.05.2025 வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இதில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.












