எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 25.03.2025 செவ்வாய்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு மு. ப 10.00 மணிக்கு புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களான டிலக்சனா, சகானா,பிரவின் என்பவர்களினால் தொற்றாநோய் பற்றியும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றியும் விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.












