தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2024.02.19 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ் அவர்களின் தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.02.19 Picture1

2024.02.14 01மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய 14.02.2024 அன்று புதன்கிழமை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாற்குடபவனியானது ஆரையம்பதி செல்வாநகர் சிவன் ஆலயத்திலிருந்து பிரதான வீதியினூடாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்தது.
சங்காபிஷேக கிரியைகள் யாவும் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வேதாகம குருமணி கிரியா ஜோதி சாமஸ்ரீ தேசமான்ய சிவஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்காபிஷேக கிரியைகளின் போது உதவிக் குருக்களாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய குரு சைவ நன்மணி சிவஸ்ரீ ஜெ.ஜெய்ப்பிரதாபன் சர்மா அவர்களும் ஆரையம்பதி வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய குரு சிவஸ்ரீ செ.சிந்துஜன் ஐயா அவர்களும் பங்கேற்றனர்.
சங்காபிஷேக கிரியைகள் யாவும் நிறைவுற்றதும் ஆலய நிருவாகத்தினரால் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
சங்காபிஷேக நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரையம்பதியைச் சேர்ந்த சமூக சேவையாளரான திரு.ஏகாம்பரம் மகேந்திரன் அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் சிறுவர் பெண்கள் பிரிவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் வறிய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வறியவர் ஒருவருக்கான உலர் உணவுப் பொதியும் உதவிப் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டமை விசேட நிகழ்வுகளாக அமைந்தது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உத்தியோகத்தர்களுடன் ஒத்துழைப்புடன் ஆலய நிருவாகத்தினர் ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.02.14 Picture1
2024.02.14 Picture2
2024.02.14 Picture3
2024.02.04
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் 2024.02.04 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உத்தியோகத்தர்களுக்கு உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தினுள் சிரமதான நிகழ்வு இடம்பெற்றதுடன் பயன்தரு பல்லாண்டு மூலிகை கன்றுகள் நடுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2024.02.04 Picture 1
2024.02.04 Picture 2
2024.02.04 Picture 3
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 
WBB
WBB Brochure

"சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்" எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் மூலிகைக் கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வு 2024.02.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்து வைக்கப்படும் பொருட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் மூலிகை கன்றுகள் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. T. தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களால் மூலிகை கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2024.02.02 Picture 1

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top