சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிரூபத்திற்கு அமைய 2024 சித்திரை புது வருட சேமிப்பு வாரமும் கைவிசேட நிகழ்வும் 2024.04.15 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 9.00 மணிக்கு சமுர்த்தி வங்கியில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் திரு. கா. நவரஞ்சன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக பிரதேச செயலாளர் அவர்களினால் புது வருட நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு சித்திரை புத்தாண்டு சேமிப்பு வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2024.04.15 Picture1 1149x960
2024.04.15 Picture2 1136x960
2024.04.15 Picture3 1280x792
2024.03.13 01
மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 13.03.2024 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் செல்வாநகர் கிழக்கு காளி கோயில் முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது அதிதிகளை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல், வரவேற்பு நடனம் ஆகியன இடம்பெற்றதனை தொடர்ந்து பிரதேச செயலாளரால் வரவேற்புரையும் மகளிர் தினம் தொடர்பான பேச்சும் இடம்பெற்றது.
அதன் பின்னர் அப்பிரதேச மக்களால் நடனம், பாட்டு, கவிதை என்பன இடம்பெற்றதுடன் பெண் தொழில் முயற்சியாளர்களின் சந்தை அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு மகளிர் சங்க உறுப்பினர்களுக்கான விளையாட்டுக்களும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்குமான பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 2024.03.13 Picture1
2024.03.13 Picture2
2024.03.13 Picture3

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.B.கோகுலராஜன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சிறப்பு வியாபார கடன் அடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் செயற்படும் வேடர்குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் 4 பயனாளிகளுக்கு பன் உற்பத்திளை ஊக்குவிக்கும் முகமாக பன் அரைக்கும் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு 29.02.2024 ஆம் திகதி வேடர்குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி M. S.F .சஸ்னா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டதுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. S. இன்பசாகரன் (கிராம அபிவிருத்தி பிரிவு), கிராம உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டதோடு, உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2024.02.29 Picture1

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகமும் தாழங்குடா சேனைத்தெரு வீரமாகாளியம்மன் ஆலயமும் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலையும் இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி 2024.03.08 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தாழங்குடா வீரமாகாளியம்மன் ஆலய முன்றலில் அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், ஆரையூர் கலைக்கழகத்தின் பங்கு பற்றுதலுடனும் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. சின்னத்துரை திவாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த கரகாட்டம், கோலாட்டம், கும்மி, கரகம், தாளலயம், தனி நடனம், குழு நடனம், நாடகம், பேச்சு, பண்ணிசையும் பஜணையும், கதாப்பிரசங்கம் மற்றும் ஆரையூர் கலாமன்றத்தின் இன்னிசை மழையும், அதிதிகளின் சிறப்பு சொற்பொழிவுகளும் மேடையை அலங்கரித்தன.
மேலும் சிவராத்திரி கலை நிகழ்வில் கலந்து கொண்ட அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
2024.03.08 Picture1
2024 ஆம் ஆண்டிற்கான பிரதேச தினக்கூட்டம் 2024.02.21 ஆம் திகதி புதன்கிழமையன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேசம் தொடர்பான சகல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. லோகினி விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. மனோரஞ்சனி ஜெயச்சந்திரன், கணக்காளர் திரு. வல்லிபுரம் நாகேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் திரு. சின்னத்துரை திவாகரன், கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி திட்ட முகாமையாளர், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, ஆயுள்வேத வைத்தியர், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர், அரச கால்நடை வைத்திய அதிகாரி, MOIC - மாவட்ட வைத்தியசாலைஸ, SI - பொலிஸ் நிலையம், காத்தான்குடி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர், தேசிய வீடமைப்பு அதிகாரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர், மாவட்ட நீர் உயிரியவியலாளர் அலுவலக உத்தியோகத்தர் (AEO), கமநல கேந்திர அபிவிருத்தி உத்தியோகத்தர், இராணுவ பொறுப்பதிகாரி, ஜீவானந்த சிறுவர் இல்ல முகாமையாளர், LIFT - திட்ட முகாமையாளர், CERI - இணைப்பதிகாரி, EHED - இணைப்பதிகாரி, AMCOR - திட்ட உத்தியோகத்தர், WIN - நிலைய பொறுப்பதிகாரி, பெண்கள் அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.02.21 Picture1

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top