News
ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையில் "நாமும் எமது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு" பிரதேச செயலகமும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் அடிப்படையில் இன்று 06.04.2019 சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரி வளாகத்தில் பாரிய சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
எமது பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் கே.ரமேஸ் அவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஊழியர்கள் வாகனங்களுடன் பிரசன்னமாகியிருந்ததுடன், இச்சிரமதான பணிக்காக பாரிய பங்கினை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது எண்ணக்கருவில் உதயமான, எமது தாய் நாட்டை போதையில் இருந்து விடுபட்ட ஒரு நாடாக மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான "சித்திரை புதுவருட உறுதி உரை இன்று (03) நாடு பூராகவும் காலை 8.30 மணிக்கு இடம் பெற்றது.
அதற்கு அமைவாக எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் உறுதி உரை வாசிக்கப்பட்டு சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது எமது பிரதேச செயலகத்தின் அனைத்து அலுவலக , சமுர்த்தி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயதுறையினை நவீன மயமாக்கல் தொடர்பான திட்டம் (பயனாளிகள் தெரிவு செய்தல்)
மேற்படி திட்டம் அமுலாக்குவது தொடர்பாக கடந்த 01.03.2019 அன்று மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தின் போது பயனாளிகள் தெரிவு செய்வதற்கான அறிவுறுத்தல் தொடர்பாக ஏலவே எமக்கு வழங்கப்பட்டமைக்கு அமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் கீழ் உள்ள அட்டவணைப்படி விவசாயம் மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு என்பவற்றில் தொடர்புபட்ட பெறுமதிசேர் உற்பத்திகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்களை மானிய திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பெறுமதிசேர் உற்பத்திகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
21.03.2019 - காலை 9 மணி - விவசாயத்துறை
22.03.2019 - காலை 9 மணி - நீர் வாழ் உயிரின வளர்ப்பு
மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பயனாளிகள் பொருத்தமான திட்ட முன்மொழிவுகளுடன், குறித்த தினங்களில் பங்குபற்றலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
அத்தோடு நேர்முக தேர்வுக்கான முன்னாயத்த செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு எமது மாவட்ட செயலகத்திற்கு முன்கூட்டியே தங்களது தகவல்களை நாம் வழங்க வேண்டியுள்ளதால் தங்களது விபரங்களை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் எமது பிரதேச செயலக திட்டமிடல் பிரிவிற்கு வழங்குவதன் ஊடாக தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு தங்களை தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம், போதைப்பொருள் இடையூறிலிருந்து மீட்டுக்கொள்ளல் மற்றும் போதைப்பொருள் பாவனையினை எதிர்த்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கும் பொருட்டு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் திங்கட்கிழமை 01.04.2019 காலை 09.00 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன்போது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் உபபொலிஸ் பரிசோதகர் , பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குடும்பநல உத்தியோகத்தர்கள், சமுர்தி முகாமையாளர்கள், சமுர்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கலாக பெருமளவானோர் கலந்துகொண்டதுடன், வீதியினால் பயணித்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் இதன்போது விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவைகளை புத்தாக்கம் கொண்டதாக மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய விழாவொன்றினை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதியன்று மு.ப. 9.30 மணிக்கு பத்தரமுல்லை பதிவாளர் நாயகத் திணைக்களத்தில் கௌரவப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடாத்தப்படவுள்ளது.












