தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான அலுவலகம் (22.07.2019) திங்கட்கிழமை மட்டக்களப்பு தாழங்குடாவில் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் கெளரவ மனோகணேசன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதான வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர்களான இ.ரவீந்திரன், சக்திகலா ரூப சிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி, அரச கரும மொழிகள் திணைக்கள ஆணையாளர் திருமதி சகோஜி பெரேரா உட்பட அமைச்சின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கெளரவ அமைச்சர் மனோகணேசன் அவர்கள் அலுவலகத்தை வைபவரீதியாக திறந்து வைத்து அலுவலக செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் அலுவலகம் இங்கு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 001 3

மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வசித்தி விநாயகர் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு சங்காபிஷேக நிகழ்வு 12.06.2019 வெள்ளிக்கிழமை மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
 
108 சங்காபிஷேக சிறப்பு யாக பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 10 குடும்பங்களிற்க்கு உலர் உணவுப்பொருட்களும், 05 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது.
 
அதே போன்று ஆண்டுதோறும் இடம்பெறும் அன்னதான நிகழ்வும் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
66396431 631579797351481 7510405063345438720 o
 
64839268 631579960684798 5979541378881814528 o
 
64876085 631579877351473 6276327368541863936 o
 
66441052 631579840684810 2979976978595053568 o
 
66502169 631580544018073 3344874088643428352 o
 
66353467 631580740684720 9145076728668880896 o
 
சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தையொட்டி ஆரையம்பதியில் கொடி விற்பனை மாதம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தின கொடி விற்பனை மாதத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் இந் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் போது முதல் கொடியினை பிரதேச செயலாளருக்கு அணிவிப்பதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
 
எமது பிரதேச செயலகத்தின் 37 ஆண்டுகள் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி தனது அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் திரு.மா.அழகுதுரை அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு கடந்த புதன்கிழமை (10) எமது பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
எமது பிரதேச செயலாளரும் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய மதிப்பிற்குரிய திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது தனது சேவையினை திறம்பட ஆற்றியிருந்த கிராம உத்தியோகத்தர் திரு.மா.அழகுதுரை அவர்களுடனான அனுபவப் பகிர்வு மற்றும் வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றன.
அத்தோடு நலன்புரிச் சங்கம் சார்பாக அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான மதிப்பிற்குரிய திருமதி.ந.சத்தியானந்தி அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கௌரவத்தினை பெற்றுக்கொண்ட ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு.மா.அழகுதுரை அவர்களின் ஏற்புரையும் கடந்தகால அனுபவப்பகிர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
64828958 630879984088129 329718506100621312 o
 
66304843 630879347421526 4792030484005650432 o
 
66251789 630879574088170 7301328241514512384 o
 
66381933 630879537421507 559519837919903744 o
 
64580356 630880037421457 2342741262232190976 o
சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தையொட்டி ஆரையம்பதியில் கொடி விற்பனை மாதம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தின கொடி விற்பனை மாதத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் இந் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் போது முதல் கொடியினை பிரதேச செயலாளருக்கு அணிவிப்பதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
 
News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top