எமது மண்முனைப்பற்று பிரதேச செலகத்தின் அலுவலக உற்பத்தித்திறன் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான உற்பத்தித்திறன் விருத்திச் செயலமர்வு 2019.03.12 ஆம் திகதியன்று செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.என்.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கான வளவாளராக காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் வளவாண்மை வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்வின் போது உதவிப்பிரதேச செயலாளர் திரு.ஜீ.அருணன் மற்றும் கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திரு.எம்.எம்.ஜரூப் ஆகியோருடன் அலுவலக, வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி சமூக மன்றமும் இணைந்து நடாத்திய 2019 ஆம் வருடத்திற்கான மகளிர் தின நிகழ்வுகள் மார்ச் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 3 மணியளவில் செல்வாநகர் கிழக்கு காளி கோயில் முன்றலில் நடைபெற்றது.

“திறமையான பெண்ணொருத்தி அழகிய உலகைப் படைக்கின்றாள்” எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்பட்ட நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் பேரிலும் ஒழுங்கு செய்யப்பட்டு உதவிப் பிரதேச செயலாளர் திரு.ஜீ.அருணன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இருந்து மகளிர் சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் அனைவருமாக இணைந்து நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு நடைபவனியாகச் சென்றடைந்தனர்.

இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.ரமேஸ், தபால் அதிபர் திருமதி. வை.லோகேஸ்வரராஜா, சமுர்த்தி தலைமை முகாமையாளர் திரு.ஆ.தனேந்திரராஜா ஆகியோருடன் கலாபூசணம் சந்திராதேவி தியாகலிங்கம் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

இந்நிகழ்வின்போது சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினால் பெண்கள் மற்றும் அலுவலர்களுக்கான குழுவினர்களுக்கிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வின் விசேட நிகழ்வாக வைத்தியர் கே.ரமேஸ் அவர்களால் “ ஆரோக்கியமான வாழ்வும் தொற்றா நோய் காப்பும்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு உரையும் நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்விற்கான பரிசில்களுக்கு கலாசார அலுவல்கள் பிரிவினர் அனுசரனை வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதன் போது சிறுகடன், சுயதொழில் முயற்சி போன்றவற்றினால் சிறப்பான முறையில் வருமானம் ஈட்டிய மூன்று பெண்களும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

 

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க ஆரையம்பதி விதாதா வளநிலையத்தின் ஏற்பாட்டில் புற்று நோய் பற்றிய விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராக நோயியல் நிபுணர் வைத்தியர் திரு. அகிலன் பங்கேற்றிருந்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மத்தியிலே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நல்நோக்கின் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் மிகதுரிதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் அது சார்ந்த விழிப்புணர்வை அதிதீவிரமாக உணர்த்தும் வகையில் சிறப்பான வளவாண்மை வைத்தியர் திரு. அகிலன் மிக சிறப்பாக நிகழ்த்தினார். வுpழிப்புணர்வு நிகழ்வின் ஆரம்பத்தில் மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திரு ஜீ. அருணன் அவர்களும் மண்முனைப்பற்று உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. குணரெட்ணம் அவர்களும் கலந்து கொண்டனர்.

 

நன்னடத்தை சிறுவர் பாராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எமது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலில் “சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்” எமது பிரதேச செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கேற்ப மார்ச் 07 மற்றும் 8 ஆம் திகதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பயணிகள் மற்றும் சாரதிகள் மத்தியில் இவ்விடயத்தை முன்னெடுத்து செல்லும் நோக்கில் வாகனங்களின் விசேட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியாதனந்தி அவர்களது ஏற்பாட்டில் இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  (26) செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

52883880 552401801935948 9076180449604141056 o 1

52980008 552401838602611 7694573784983928832 o

52708568 552401231936005 2976111250330615808 o

53010676 552401218602673 7253357433957908480 o

53229675 552401621935966 6152340067957342208 o

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top