மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயதுறையினை நவீன மயமாக்கல் தொடர்பான திட்டம் (பயனாளிகள் தெரிவு செய்தல்)


மேற்படி திட்டம் அமுலாக்குவது தொடர்பாக கடந்த 01.03.2019  அன்று மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தின் போது பயனாளிகள் தெரிவு செய்வதற்கான அறிவுறுத்தல் தொடர்பாக ஏலவே எமக்கு வழங்கப்பட்டமைக்கு அமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் கீழ் உள்ள அட்டவணைப்படி விவசாயம் மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு என்பவற்றில் தொடர்புபட்ட பெறுமதிசேர் உற்பத்திகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்களை மானிய திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எனவே எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பெறுமதிசேர் உற்பத்திகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


21.03.2019 - காலை 9 மணி - விவசாயத்துறை

22.03.2019 - காலை 9 மணி - நீர் வாழ் உயிரின வளர்ப்பு 


மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும்  பயனாளிகள் பொருத்தமான திட்ட முன்மொழிவுகளுடன், குறித்த தினங்களில் பங்குபற்றலாம் என்பதை அறியத்தருகின்றோம். 


அத்தோடு நேர்முக தேர்வுக்கான முன்னாயத்த செயற்பாடுகளை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு எமது  மாவட்ட செயலகத்திற்கு முன்கூட்டியே தங்களது தகவல்களை நாம் வழங்க வேண்டியுள்ளதால்  தங்களது விபரங்களை  எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர்  எமது பிரதேச செயலக திட்டமிடல்  பிரிவிற்கு வழங்குவதன் ஊடாக  தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு தங்களை தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்.

 

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top