செய்திகள்
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் மற்றும் செல்வாநகர் கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விரிப்புகள் (ரென்ட்) வழங்கிவைக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வானது செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான விரிப்புகளை வழங்கிவைத்தார்.
இதன் போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத், மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி உட்பட கிராம உத்தியோகத்தர்களான திரு.கோ. பஞ்சாட்சரம், திரு. நிறோசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பசுமை உற்பத்தித் திறன் தொடர்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று 02.12.2019 திங்கட்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதியில் நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இச் செயலமர்வினை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இச் செயலமர்வில் உற்பத்தித்திறன் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஆர்.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் வளவான்மை ஆற்றியிருந்தார்.
பிரதேச செயலக உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களின் ஒருங்கமைப்பில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் மண்முனைப்பற்று, வெல்லாவெளி மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கலென பெருமளவானோர் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மண்முனைப்பற்று பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்களால் எழுதப்பட்ட " ஊற்று கையொழுத்து சஞ்சிகையினை " மதிப்பிற்குரிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் மகளிர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நல்லிணக்கம் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கான ஆக்கபூர்வமான கருத்தாடல் செயலமர்வொன்று தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரனையுடன் 22.10.2019 செவ்வாய்க்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி அவர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பட்டிப்பளை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும் எமது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை நடாத்தியிருந்தனர்.
நிகழ்வில் கிராம மட்ட குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வண்ணமான பயிற்ச்சியினை பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை திறனை வெளிப்படுத்தும் நோக்கில் எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனை மற்றும் தலைமையில் மாதாந்தம் நடாத்தப்பட்டுவரும் "சிறுதுளி - 2" நிகழ்வானது 21.10.2019 ஆந் திகதி 3.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது Bright தரவளையத்தினால் (EDO) விழிப்புணர்வு வில்லுப்பாட்டு கலை நிகழ்வொன்று நிகழ்த்தப்பட்டதுடன், இவர்களால் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்விற்கு உத்தியோகத்தர்ளால் அமோக வரவேற்பு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.















