செய்திகள்
எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக நடாத்தப்பட்டுவரும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் "சிறுதுளி" நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
எமது பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவும் தகவல் தொடர்பாடல் பிரிவும் இணைந்து இதன்போது ஆற்றுகை செய்திருந்தனர்.
பாடும் திறனுள்ள உத்தியோகத்தர்களால் பாடல்கள் பாடப்பட்டதுடன், இரு பிரிவினரும் இணைந்து நாட்டிய நாடகம் ஒன்றினையும் அரங்கேற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி உள்ளிட்ட கிளைத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



"வளர்ந்து வரும் நாட்டிற்கு ஒரு வளரும் மரம்" தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் முதலாம் திகதி முதல் மரம் நடும் வாரமாக நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதன் ஓரங்கமாக மண்முனைப்பற்று பாலமுனை நடுவோடை பகுதியில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நடுவோடை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் இடம்பெற்ற
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி அவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மீன்பிடி சங்க நிருவாகிகள் மற்றும் சிறுவர்களென அதிகளவிலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் 01.01.2020 ஆந் திகதி புதன்கிழமை பி.ப 12.00 மணிக்கு எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஆரையம்பதி பிரதேசத்திலிருந்து டெங்கு அபாய நிலையினை மிக விரைவில் நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை செயற்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


"கற்றல் உபகரணம் இன்மையால் பாடசாலை செல்லாமல் ஒரு பிள்ளையேனும் இருத்தல் கூடாது" எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை செல்லும் கற்றல் தேவைப்பாடுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 70 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டிற்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர் (கிராம சேவகர்), சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்கள்.
பிரதேச வர்த்தகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட உள்ளுர் அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரனையில் இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இன்றையதினம் மலர்ந்துள்ள புத்தாண்டில் சுப நேரத்தில் உறுதிமொழியினை உரக்க கூறி தத்தமது கடமையினை ஆரம்பிக்கும் நிகழ்வு புதன்கிழமை 01.01.2020 பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இவ் ஆரம்ப நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயீர்நீத்த வீரர்களுக்காக இருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி, அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி அவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களென அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.














