செய்திகள்
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு மகப்பேற்று கிளினிக் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ரூபா 5000.00 பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.12.2025 செவ்வாய்க் கிழமை கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு கிளினிக்களில் பதிவு செய்யப்பட்ட 109 பயனாளி தாய்மார்களுக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் எமது மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் என்பவர்களினால் வழங்கி வைக்கப் பட்டது. இப் பொதிகள் ஏனைய பயனாளிகளான 372 பேருக்கும் எதிர்வரும் 19.12.2025 வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலாளர் பிரிவில் 03.12 .2025 புதன் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு "சிறந்த பெற்றோராகுதல் " தொடர்பான பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உ த் தியோகத்தரின் ஒருங்கிணைப்பின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக பட்டிப்பளை பிரதே ச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. G. உமாரமணன் பங்குற்றினார். அத்துட ன் இந் நிகழ்வில் முன் பிள்ளைப்பருவ சிறார்களின் பெற்றோர்கள், கர்ப்பினி தாய்மார்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.