மேற்படி வேலைத்திட்டத்திற்கமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 300 சமுர்த்தி பயனாளிகளுக்கு அதன் முதற்கட்டமாக  உபகரணம் வழங்கும் நிகழ்வானது 25.10.2021 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக  நடைபெற்றது. மேற்படி வேலைத்திட்டத்திற்கமைவாக மண்முனைப்பற்று  பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 300 சமுர்த்தி பயனாளிகளுக்கு அதன் முதற்கட்டமாக  உபகரணம் வழங்கும் நிகழ்வானது 25.10.2021 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக  நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

அதனடிப்படையில் விவசாயத்திட்டத்தின் கீழ்  33 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்களும்,  சந்தைப்படுத்தல் திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு சிகையலங்கார தொழிலுக்கான  உபகரணங்களும் 09 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்ட அதேவேளை சிறுகைத் தொழில் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்கள்" என்னும் தொனிப்பொருளிற்கு அமைவாக பட்டினியற்ற நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஒரு இலட்சம் பலாமரக்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டத்திட்டமானது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்றில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும்
பலாமரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமானது பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சிறுவர் கழகங்களின் பங்களிப்புடன் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எல்.விவேகானந்தராஜா மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG 20211006 WA0107

 

எமது மாவட்டத்திலும் அதிவேகமாக பரவி வருகின்ற COVID-19 தொற்று காரணமாக பொதுமக்களின் வெளி நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளும்பொருட்டு அத்தியாவசியப் பொருட்களை வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே பின்வரும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து தங்களது அத்தியாவசிப் பொருட்களை வீட்டில் இருந்தவாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மண்முனைப்பற்று பொதுமக்களுக்கு அறியத்தருகின்றேன்.
இக் காலகட்டத்தில் தாங்கள் ஏதேனுமொரு வகையில் சிக்கல்களை எதிர்நோக்கினால் 065 224 8899 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
 
 
 

கொவிட் தடுப்பூசி வழங்கும் குறித்த நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

C0271T01

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் ந.சத்தியானந்த் அவர்களின் தலைமையில் (23) வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணிக்கு பிரதேச செயலக பிள்ளையார் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் விசேட பூசையின் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பஜனை நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பக்தி பூர்வமாக இடம்பெற்ற இந் நிகழ்வின் இறுதியில் ஐந்து மாணவர்களுக்கான சப்பாத்துக்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
பூசையின் இறுதியில் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், Covid - 19 நிலையினை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினரே இம்முறை ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top