News
மண்முனைப்பற்று பிரதேச செயலக இப்தார் நிகழ்வு 2022.04.20 ஆம் திகதி காங்கேயனோடை கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஈரான் நகர் ரசூல் பள்ளிவாசலில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. V.லோகினி, மேலதிக மாவட்ட பதிவாளர் A.G.M.பர்சாத், நிர்வாக உத்தியோகத்தர் திரு. S.திவாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் A.L.முசாதிக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் S.கோமளன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வினை மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






மட்டக்களப்பு மாவட்டத்தில் Transparency International Sri Lanka நிறுவனமானது LIFT நிறுவனத்துடன் இணைந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்றை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.04.2022 ஆம் திகதி இடம்பெற்றது.
இலஞ்ச ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு மக்களோடு தொடர்புபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் Transparency International Sri Lanka நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் பிரியா போல்ராஜ், உத்தியோகத்தர்களான கசுல் ரணசிங்க, ரகுமான் ஆகியோர் வளவாளர்களாகவும் LIFT நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் தனுஜா, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தருக்கான நிர்வாக உத்தியோகத்தர், பதவி நிலை உதவியாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு 2022.04.07 ஆம் திகதி வியாழக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெற்றது.
இதன் போது சமுர்த்தி பயனுகரிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. V.லோகினி, சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இவ் விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்றைய தினமும் (2022.04.08) ஆரையம்பதி சிறு கைத்தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.04.2022 ஆந் திகதி இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரையம்பதி பிரதேச வர்த்தகர்களின் நிதி அனுசரணையுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. V.லோகினி, கணக்காளர் V.நாகேஸ்வரன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் T.மதிராஜ் உட்பட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு மற்றும் தகவல் தொடர்பாடல் பிரிவு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















