News
சௌபாக்கியா வார வேலைத்திட்டம் நாடு பூராகவும் 2022.03.24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில், பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளியிடம் வீட்டினை கையளித்ததுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. S.P.R. பரீட், சமுர்த்தி முகாமையாளர் K.நவரஞ்சன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "நிலைபேறான நாளைக்காக இன்றைய பால்நிலை சமத்துவம்" எனும் கருப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 2022.03.08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணிக்கு பாலமுனை நடுவோடை கடற்கரை பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக கவிதை, தனிப்பாடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பெண் தலைமைத்துவத்தினை கௌரவிக்கும் முகமாக பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி நிலை உதவியாளர்களுக்கு பூச்செண்டுகளும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











சர்வதேச மகளிர் தினமானது 2022.03.08 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானத்தி அவர்களது தலைமையில் விழிப்புணர்வு நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது.
"நிலைபேறான நாளைக்காக இன்றைய பால்நிலை சமத்துவம்" எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளிற்கு அமைய காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியானது "பெண்களின் தலைமைத்துவத்தின் ஊடாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்வோம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைய புதுக்குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய முன்றலை சென்றடைந்தது.
பின்னர் அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்ற பிரதான நிகழ்வானது சூரியா பெண்கள் அமைப்பின் வரவேற்புப் பாடலுடன் ஆரம்பமாகியதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் தலைமையுரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவியின் "மகளிரைப் போற்றுவோம்" எனும் கவிதை இசைக்கப்பட்டதுடன், "இயற்கை விவசாய உரப்பாவனையை ஊக்குவிப்போம்" எனும் தொனிப்பொருளில் விசேட உரைகளும் இடம்பெற்றன. சூரியா பெண்கள் அமைப்பின் விழிப்புணர்வு வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், இதன் போது அதிதிகளினால் பயன் தரும் பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பெண்களின் சுதந்திரத்தின் வெளிப்பாடாக அதிதிகள் உள்ளிட்ட பங்கு பற்றிய அனைத்து பெண்களினாலும் பலூன்கள் பறக்கவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.V.லோகினி, பிரதேச செயலக கணக்காளர் V.நாகேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும், கிரான்குளம், கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் மத்தி, கிரான்குளம் தெற்கு, புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு வடக்கு, புதுக்குடியிருப்பு தெற்கு மற்றும் தாளங்குடா ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கான மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
























