எமது பிரதேச செயலகத்தின் 37 ஆண்டுகள் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி தனது அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் திரு.மா.அழகுதுரை அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு கடந்த புதன்கிழமை (10) எமது பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
எமது பிரதேச செயலாளரும் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய மதிப்பிற்குரிய திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது தனது சேவையினை திறம்பட ஆற்றியிருந்த கிராம உத்தியோகத்தர் திரு.மா.அழகுதுரை அவர்களுடனான அனுபவப் பகிர்வு மற்றும் வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றன.
அத்தோடு நலன்புரிச் சங்கம் சார்பாக அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான மதிப்பிற்குரிய திருமதி.ந.சத்தியானந்தி அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கௌரவத்தினை பெற்றுக்கொண்ட ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு.மா.அழகுதுரை அவர்களின் ஏற்புரையும் கடந்தகால அனுபவப்பகிர்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
64828958 630879984088129 329718506100621312 o
 
66304843 630879347421526 4792030484005650432 o
 
66251789 630879574088170 7301328241514512384 o
 
66381933 630879537421507 559519837919903744 o
 
64580356 630880037421457 2342741262232190976 o

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top