மண்முனைப்பற்று பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2023.04.19 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ.சி.சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. மேலும் இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் உட்பட மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.04.19 01
2023.04.19 02
2023.04.19 03
2023.04.19 04
2023.04.19 05
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top