செய்திகள்
எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 2025.03.18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கிரான்குளத்தில் சிறுபோக பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான பயறு பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.





சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 08.03.2025 திகதி ஆரையம்பதி சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச மகளிர்களும் சிறப்பு அதியாக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி Dr.T.திலக்ஸன் அவர்களும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு .S.திவாகரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.ASF. பரீட் அவர்களும், AMCOR நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. பரமசிவம் முரளிதரன் அவர்களும் SWO தலைவர் திருமதி தயானி கிருஷ்ணாகரன் அவரகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பெண்களுக்கான கலைநிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் புகைத்தல் ஒழிப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்ட குறுக்கெழுத்து மற்றும் சித்திர போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையினை AMCOR பெண்கள் சுய உதவிக் குழுவினரும், SWO நிறுவனத்தினர் மற்றும் சமுர்த்தி திணைக்களமும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.























