மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் தரம் 5ம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கு 29.06.2024 ஆந் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் வளவாளரான வி. சந்திரசேகரம் (ISA), சமுர்த்தி தலைமையக முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி சமூக சேவை உதவியாளர், NDDCB உத்தியோகத்தர், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2024.06.29 Picture

2024.04.21 01 1
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தாழங்குடா வாழ்வின் எழுச்சி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி நடாத்தும் புத்தாண்டு விளையாட்டு விழா 2024.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு தாழங்குடா சமுர்த்தி வங்கி முகாமையாளர் U.சம்சுதீன் அவர்களது தலைமையில் கிரான்குளம் தெற்கு தர்மபுரம் ஆலையடி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி செயற்திட்ட முகாமையாளர், தாழங்குடா சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.04.21 Picture1
2024.04.21 Picture2
2024.04.21 Picture3

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 2024.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் காங்கேயனோடை, காங்கேயனோடை தெற்கு, ஆரையம்பதி தெற்கு, ஆரையம்பதி 01, ஆரையம்பதி 02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அரிசி விநியோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024.04.21 Picture1

2024.04.21 01
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஆரையம்பதி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி நடாத்தும் புத்தாண்டு விளையாட்டு விழா 2024.04.21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு ஆரையம்பதி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு. கா.நவரஞ்சன் அவர்களது தலைமையில் மட்/மட்/ ஆரையம்பதி மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், ஆரையம்பதி சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 2024.04.21 Capture 01
2024.04.21 Capture 02
2024.04.21 Capture 03
2024.04.21 Capture 04
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு 2024.04.08 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தலைமையக முகாமையாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பயனாளிகளின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு கண்காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் நுகர்வு மற்றும் தொழில் முயற்சிக்கான கடனும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.04.08 Picture1 1280x487
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top