"வனமாக்கல்" தேசிய நிகழ்விற்கு இணைவாக நாற்றுமேடைகள் அமைத்தல் திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்றில் உள்ள பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு  (30) வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரெட்ணம் அவர்களால் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட 9 பாடசாலைகளுக்கான உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது அனைத்து பாடசாலைகளுக்கும் கூட்டுப் பசளை, மண்வெட்டி, முள் மண் வெட்டி, கை முள் செட்இ பூவாளி, தெளிகருவி, பொலித்தீன் பை, குப்பை வாரி மற்றும் பப்பாசி விதை போன்ற உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேச தின கூட்டம் கடந்த 30.01.2020 எமது பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய மாவட்ட தைப்பொங்கல் விழா இவ் வருடம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (17) ஆந் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதன் போது எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையிலான எமது அலுவலக உத்தியோகத்தர்கலும் கலந்து கொண்டு பொங்கல் பொங்கியதனை படங்களில் காணலாம்.

டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் 29.01.2020 ஆந் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கிராமிய பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பனம் பொருள் கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபடும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் இன்று (08) வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 20 சுயதொழில் முயற்சியாளர்களுக்கும் தலா பதினைந்தாயிரம் பெறுமதியான உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக இடம் பெற்ற இந்நிகழ்வின்போது பிரதேச செயலாளர் கலந்து கொண்டு இவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரெட்ணம் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top