"வனமாக்கல்" தேசிய நிகழ்விற்கு இணைவாக நாற்றுமேடைகள் அமைத்தல் திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்றில் உள்ள பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (30) வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரெட்ணம் அவர்களால் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட 9 பாடசாலைகளுக்கான உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது அனைத்து பாடசாலைகளுக்கும் கூட்டுப் பசளை, மண்வெட்டி, முள் மண் வெட்டி, கை முள் செட்இ பூவாளி, தெளிகருவி, பொலித்தீன் பை, குப்பை வாரி மற்றும் பப்பாசி விதை போன்ற உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
















