පුවත්






மண்முனைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய இலங்கேஸ்வரன் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வும் சிறுவர் மகிழ்வு கொண்டாட்டமும் ஆரையம்பதியில் இடம் பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் நேற்று (03) சனிக்கிழமை மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு காளி கோயில் முன்றலில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
"இசையால் வசமாகா இதயமெது - மீண்டும் இசையோடு பயணிப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு மோகனதாசன், ஆரையம்பதி தபால் நிலைய தபால் அதிபர் திருமதி.வை.லோகேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கலைவளர்த்த ஆரையம்பதி மண்ணிலே நீண்டகாலத்திற்கு பின்பு இலங்கேஸ்வரன் இசைக்குழுவின் மூத்த மற்றும் இளம் கலைஞர்களின் ஒருங்கிணைப்புடனான இசைநிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவையின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேசத்தின் புகழை நிலைக்க செய்கின்ற மூத்த இளம் கலைஞர்கள் தங்களது ஒற்றுமையான ஒருங்கிணைப்புடன் இசைத்துறைசார்ந்த பல்துறை ஆற்றலை வெளிப்படுத்தும்வகையிலான சிறந்ததொரு களமாகவும் இந்த இசை மேடை அமைந்திருந்தது.
கலைஞர்களின் உள நலனை மேலாங்க செய்து கலைஞர்களின் மன அழுத்தத்தை அரங்காற்றுகைகளூடாக குறைக்கின்ற வகையிலான மிகச்சிறந்ததொரு கலைகளமாக இந்நிகழ்வு ஆரையம்பதி மண்ணிலே இடய்பெற்றது.
ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு காளி அம்மன் ஆலய நிருவாக சபையினர் மற்றும் சக்தி விளையாட்டு கழகத்தினர் இணைந்து இந்ந வரலாற்று இசை நிகழ்விற்கான ஒத்துளைப்புக்களை மேற்கொண்டிருந்ததுடன், இளம் கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்ததுடன், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சிறுவர்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.








மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் விதாதா வள நிலையத்தில், பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களுடைய ஆலோசனையின் பேரில் மரமுந்திரிகை விதைகளை நவீன முறையில் குறைந்த செலவில் (01 கிலோவிற்கு 80 ரூபாய் மட்டும்) உடைத்து பதனிடும் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
எமது மாவட்டத்தில் குடிசைக் கைத்தொழிலில் மரமுந்திரிகை செய்கையானது பாரிய முன்னேற்றத்தை கண்டு வரும் நிலையில் நவீன முறையில் விதைகளை உடைத்து துப்பரவு செய்து பதனிடும் செயற்பாட்டிற்கு அதி நவீன இயந்திரங்கள் தேவையாக இருப்பதனால், குறித்த சுய தொழில் முயற்சியை மேற்கொண்டு வரும் முயற்சியாளர்கள் பாரிய கஷ்டத்துக்குள்ளாகி வருகின்றமையை உணர்ந்துகொண்ட பிரதேச செயலாளர் அவர்களால், இப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக விதாதா வள நிலையத்தின் ஊடாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மர முந்திரிகை கைத்தொழில் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் முயற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் இச் சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அறியத்தருவதுடன், விதாதா வள நிலையத்தின் விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தரை 070 2662 2890 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தங்களுக்கான சிறந்த சேவையினை மிக விரைவாக பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்திற்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுனர் பயிற்சி வழங்குவதற்கான நியமனக் கடிதங்கள் இன்று 28.08.2020 ஆந் திகதி வழங்கிவைக்கப்பட்டது.
பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நியமனக் கடிதத்தினை பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்கள் வழங்கி வைப்பதையும், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.
















