පුවත්
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித் திறன் (National Productivity) Citizen Mirror போட்டியில் மாவட்ட மட்டத்தில் 3ஆம் இடத்தையும், அகில இலங்கை மட்டத்தில் 14ஆம் இடத்தையும் பெற்று சிறப்பித்துள்ளது.
இன்று(16.06.2026) Colombo Galle Face Hotel இல் நடைபெற்ற பாராட்டு விழாவில், எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷண கெளரி தினேஷ் அம்மணி அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு வி. ரமேந்திரன் அவர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சார்பில் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.



மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் - 2026
மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும் நிகழ்வானது 2026.01.27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் (பதில் கடமை) திரு. உ.உதயஸ்ரீதர் ஆவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
செல்வாநகர் சிவன் ஆலயத்தில் இருந்து பாற்குட பவணியுடன் கதிர் எடுத்துவரப்பட்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் கதிர்களுக்கு பூசைசெய்து கதிர் சூடடிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு கி. இளங்குமுதன், கணக்காளர் திரு அ. மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் திரு.வே.தவேந்திரன் ஆகியோருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ஒருபுறம் சங்காபிஷேக நிகழ்வுகளும் மறுபுறம் ஒவ்வோரு கிளைகளும் வெவ்வேறு வகையான பொங்கல் பானை வைத்தல் நிகழ்வுகளும் இடம்.பெற்று பிரதேச செயலகம் விழாக்கோலம் பூண்டது. இதன்போது உத்தியோகத்தர்களின் பாடல்களும் இடம்பெற்றன.
தொடர்ந்து சங்காபிஷேக பூசை மற்றும் தைப்பொங்கல் பூசைகள் இடம்பெற்று நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது.
அறுவடை நிகழ்வு
2025 மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட நிலக்கடலை அறுவடை நிகழ்வானது கிரான்குளம் மத்தி கிராம சேவகர் பிரிவில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 07/01/2026 இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், கால்நடை உத்தியோகத்தர்கள், சமுக வலுவூட்டல் உத்தியோத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.



மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய உதவி பிரதேச செயலாளர் பதவியேற்பு
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் (பதில்) கடமை புரிந்து கிழக்கு மாகாண அபிவிருத்திகளில் செவ்வனே தனது கடமையை நிறைவேற்றி, சொந்த மாவட்டத்தில் மக்களுக்கான தனது சேவையினை வழங்க வேண்டும் எனும் நிறைந்த அபிலாசைகளுடன் திரு.K.இளம்குமுதன் அவர்கள் இன்று 21.01.2026 புதன்கிழமை காலை மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வசித்தி விநாயகரின் ஆசியுடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் (பதில் கடமை) திரு.U. உதயஸ்ரீதர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. A. சுதர்சன், கணக்காளர் திரு. A. மோகனகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திரு. V. தவேந்திரன், சமூக சேவை உத்தியோகத்தர் திரு. S. சிவலிங்கம் , பிரதேச செயலக நலன்புரி சங்க செயலாளர் திரு. V. பாஸ்கரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களின் கலந்துரையாடலுடன் கிளைகள் ரீதியான அறிமுகம் செய்து வைக்கப்பட்டது, தொடர்ந்து நலன்புரி சங்கத்தினால் தேநீர் உபசாரம் இடம் பெற்று, இந்நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.



2026 ம் ஆண்டு புது வருட நிகழ்வு
2026 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகம் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வருடத்தின் முதல் நாளான 2026.01.01 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று மு.ப 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களது தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூறும் முகமாக இரு நிமிட மௌன இறை வணக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் "வளமான நாடு அழகான வாழ்க்கை" ஊடாக சவால்களின் முன்னிலையில் தயங்கமாட்டோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களினால் வாழ்த்துச் செய்தியுடன் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணக்காளர் திரு அ. மோகனகுமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு அ. சுதர்சன் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் வாழ்த்துச் செய்திகளும் வழங்கப்பட்டது. மேலும் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.
















