மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக உத்தியோகத்தராக திரு. சின்னத்துரை திவாகரன் ஐயா அவர்கள் 10.08.2026 அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷண கௌரி தினேஷ் அம்மணி அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றதுடன், முன்னாள் நிர்வாக உத்தியோகத்தரான திரு. வேலாயுதம் தவேந்திரன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார்.
புதிய நிர்வாக உத்தியோகத்தரான திரு. சின்னத்துரை திவாகரன் ஐயா அவர்களுக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களின் சார்பிலும் அன்பான வரவேற்பையும், மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
773123744 2484098742099568 8977380481204330025 n771468971 2484098662099576 2776199747783677530 n771828540 2484098772099565 8204831483067390902 n
மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு, மட்டக்களப்பு Vision Care நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண் பரிசோதனை நிகழ்வு 10.08.2026 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அவர்களின் பார்வை தொடர்பான தேவைகள் மற்றும் கண் ஆரோக்கியம் குறித்து தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
770869115 2484153632094079 3447762416239996306 n772908557 2484153658760743 7977430666263215635 n773632980 2484153635427412 8862793574797937699 n
"நேர்மையான கலாசாரம் - சுத்தமான இலங்கை" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் 'நேர்மை வாரம்' (Integrity Week ) சிறப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் திரு. கிருஷ்ணப்பிள்ளை இளம்குமுதன் அவர்களால் உறுதிமொழி வாசிக்கப்பட்டதற்கு இணங்க அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் ஆற்றிய உரையில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புதல் ஆகியன தற்போதைய அரசின் முதன்மையான எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதுடன், இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, அரச சேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்துதல் தலையாய நோக்கமாகும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
சமுர்த்தி தேசிய வேலைத்திட்ட மாதத்தை முன்னிட்டு 27. 07. 2026 ம் திகதி மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் வடக்கு 150 B பிரிவில் ரண்விமன ஆரோக்கிய வசதியுடைய வீடு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலமையில் திறந்து வைக்கப்பட்டதோடு ரூபா பத்தாயிரம் பெறுமதியான உணவுப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மகாசங்க நிறைவேற்றுக்குழு தலைவி திருமதி R. சங்கவி சமுர்த்தி தலமையக முகாமையாளர் திரு. க. உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் திரு. சா. ஆனந்த மோகன், ஆரையம்பதி வங்கி முகாமையாளர் திரு. கா. நவறஞ்சன், தாழங்குடா வங்கி முகாமையாளர் திருமதி சோ. தமிழ்வாணி, மற்றும் சமூக அபிவிருத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் *அவசர காலநிலை நடவடிக்கை* *"Urgent Climate Action*" எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட *பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக துணிப்பைகளை வழங்கும்* நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் தலைமையிலும், உதவி பிரதேச செயலாளரின் வழிகாட்டலிலும், பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஒருங்கமைப்பு மற்றும் ஆலோசனைக்கிணங்கவும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றலுடன் 12.06.2026 மு.ப 8.30 மணியளவில் , ஆரையம்பதி பொதுச் சந்தையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.
 
☘️இந் நிகழ்வின் போது அதிதிகளை வரவேற்றதுடன் இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டு பிரதி திட்டமிடல் பணிப்பாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து பிரதேச செயலாளர் மிகச் சிறப்பான முறையில் தலைமை உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தரால் திட்டத்தின் விளக்கவுரை நிகழ்ந்ததை தொடர்ந்து சந்தை பயனாளிகளுக்கும், அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் துணிப்பை வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரினால் தொடங்கி வைக்கப்பட்டது இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தரால் காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்படுவோம், சுற்றுச்சூழல் மாற்றம் பொலித்தீன் பைகளுக்கு எதிரான விழிப்பூட்டல் உரை என்பன மக்களிடையே பகிரப்பட்டன.
 
☘️மேலும் சிவா வித்தியாலய மாணவர்களினால் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு எதிரான பதாதைகள் ஏந்திய விழிப்புணர்வூட்டும் பேரணி நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,
மண்முனைபற்று பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள், சிவா வித்யாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top