ஆரையூர் பகல் பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி திறந்துவைப்பு.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஊடாக உலக வங்கியின் அனுசரணையுடன் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி செயற் திட்டத்தின் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் எமது பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட "ஆரையூர் பகல் பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி " 23. 09.2025 அன்று அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் அம்மணி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் முற்பகல் 9.30 மணி அளவில் இடம்பெற்றது இந்நிகழ்வில் மாவட்ட செயலக பொறியியலாளர், மட்டக்களப்பு கல்வி வலையத்தின் உதவி கல்வி பணிப்பாளர், மற்றும் மாவட்ட செயலக முன்பள்ளி பருவ இணைப்பாளர், பிரதேச செயலக நிர்வாகத் உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

















