சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு தேசிய மர நடுகை வேலைத்திட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர், தலைமையக முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.













