2024.02.14 01மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய 14.02.2024 அன்று புதன்கிழமை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாற்குடபவனியானது ஆரையம்பதி செல்வாநகர் சிவன் ஆலயத்திலிருந்து பிரதான வீதியினூடாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்தது.
சங்காபிஷேக கிரியைகள் யாவும் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வேதாகம குருமணி கிரியா ஜோதி சாமஸ்ரீ தேசமான்ய சிவஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்காபிஷேக கிரியைகளின் போது உதவிக் குருக்களாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய குரு சைவ நன்மணி சிவஸ்ரீ ஜெ.ஜெய்ப்பிரதாபன் சர்மா அவர்களும் ஆரையம்பதி வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய குரு சிவஸ்ரீ செ.சிந்துஜன் ஐயா அவர்களும் பங்கேற்றனர்.
சங்காபிஷேக கிரியைகள் யாவும் நிறைவுற்றதும் ஆலய நிருவாகத்தினரால் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
சங்காபிஷேக நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரையம்பதியைச் சேர்ந்த சமூக சேவையாளரான திரு.ஏகாம்பரம் மகேந்திரன் அவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் சிறுவர் பெண்கள் பிரிவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் வறிய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வறியவர் ஒருவருக்கான உலர் உணவுப் பொதியும் உதவிப் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டமை விசேட நிகழ்வுகளாக அமைந்தது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உத்தியோகத்தர்களுடன் ஒத்துழைப்புடன் ஆலய நிருவாகத்தினர் ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.02.14 Picture1
2024.02.14 Picture2
2024.02.14 Picture3

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top