பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக்கொண்டாட்டம் - 2023.06.05
பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் சர்வதேச சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு 2023.06.05 ஆம் திகதி செவ்வாய்கிழமை சிறுவர் கழகங்களுக்கிடையிலான சித்திரப்போட்டி மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இப்போட்டி நிகழ்வில் 58 சிறார்கள் பங்குபற்றியிருந்ததுடன் இதில் வெற்றியீட்டிய சிறார்கள் மற்றும் "வளி மாசடைதலும் அதன் தாக்கமும்" எனும் தலைப்பில் 2023.05.31 ஆம் திகதி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு சான்றிதழ்களும் பங்கு பற்றிய ஏனைய அனைத்து சிறார்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















