
மண்முனைப்பற்று பிரதேச செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கான பிரபல உத்தியோகத்தர் தெரிவிற்கான தேர்தல் 2022.12.21 ஆம் திகதி புதன்கிழமையன்று மு.ப 9.30 தொடக்கம் பி.ப 3.00 மணி வரையான காலப்பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த தேர்தலில் 03 பெண் வேட்பாளர்கள் மற்றும் 01 ஆண் வேட்பாளர் உட்பட நால்வர் போட்டியிட்டிருந்ததுடன் இத்தேர்தலில் திருமதி. வசந்தமலர் பாலசந்திரன் அவர்கள் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.























