மண்முனைப்பற்று பிரதேசத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது (05) திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதன்போது நிகழ்வினை அலங்கரித்த சிறார்களின் கலை நிகழ்வுகளையும், அதிதிகளினால் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பதனையும், சிறுவர் கழகத்தினால் ஊற்று சஞ்சிகை வெளியிட்டு வைப்பதனையும் படங்களில் காணலாம்.




















