2026 ம் ஆண்டு புது வருட நிகழ்வு
2026 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகம் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வருடத்தின் முதல் நாளான 2026.01.01 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று மு.ப 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களது தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூறும் முகமாக இரு நிமிட மௌன இறை வணக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் "வளமான நாடு அழகான வாழ்க்கை" ஊடாக சவால்களின் முன்னிலையில் தயங்கமாட்டோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களினால் வாழ்த்துச் செய்தியுடன் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணக்காளர் திரு அ. மோகனகுமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு அ. சுதர்சன் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் வாழ்த்துச் செய்திகளும் வழங்கப்பட்டது. மேலும் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.
















