இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு
மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் 2025.02.04 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உத்தியோகத்தர்களுக்கு சுதந்திர தினம் பற்றியும் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் Clean Sri Lanka வேலைத் திட்டம் பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.












