மாவிலங்கதுறை சிவில் பாதுகாப்பு குழு மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நடாத்திய இரத்த தான நிகழ்வு 2024.08.04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 1.30 மணி வரை மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கலந்து கொண்டிருந்ததுடன் 32 கொடையாளிகளினால் இரத்த தானம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













