குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் May மாதத்திற்கான அரிசி வழங்கும் நிகழ்வு 2024.06.11 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோவில்குளம், ஒல்லிக்குளம், புதுக்குடியிருப்பு மற்றும் மாவிலங்கதுறை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலாளர் அவர்களினால் அரிசி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













