சுபீட்ஷமான நாளைய தினத்துக்கான சௌபாக்கிய தேசியம் என்னும் தொனிப்பொருளின் கீழ் 74 ஆவது சுதந்திர தின விழா மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் 04.02.2022 அன்று நடைபெற்றது. இதன் போது மு.ப 8.19 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களினால் தேசியகொடி ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசியகீதமும் இசைக்கப்பட்டது. பின்னர் நாட்டிக்காக உயிர் நீத்தவர்களுக்கான மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் வரவேற்புரை மற்றும் தேசிய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியதான உரையினை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. ந. சத்தியானந்தி அவர்கள் நிகழ்த்தினார். அடுத்ததாக காரியாலய சுற்று சூழலை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் 74 ஆவது சுதந்திர தினத்துக்கான மரநடுகை நிகழ்வானது 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top